சென்னை, டிச.2 - ஜஸ்ட் என்டர்டெயின் மென்ட் மற்றும் குல்மோஹர் மைத்ரி அமைப்புகள் இணைந்து கர்ப்பப்பை வாய் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்வை மார்ச் 2 அன்று தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்த உள்ளன. சென்னையில் சனிக்கிழ மையன்று நடந்த செய்தி யாளர் கூட்டத்தில் குல்மோஹர் மைத்ரி ஒருங்கிணைப்பாளர் மஞ்சு சின்ஹா கூறியதாவது. பொதுமக்களிடம் கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுப்பதற்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது. குல்மோஹர் மைத்ரி அமைப்பின் மூலம் 15 ஆயிரம் பெண் குழந்தை களுக்கு விழிப்பு ணர்வு செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து பின்தங்கிய சமூகங்களை 2,100 பெண்களுக்கு (வயது 19-14) ஹெச்பிவி இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிக்க புற்றுநோயிலிருந்து குண மானவர்களை முன்மாதிரி யாகக் கொண்டு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோயை முன்கூட்டியே கண்டறிய அதிநவீன கருவி அயல் நாட்டிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கர்ப்ப ப்பை வாய் புற்றுநோயை முற்றிலும் தடுப்பதற்காக இந்த விழிப்புணர்வு நடத்தப்படுவதுடன் இது கின்னஸ் உலக சாதனை முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஜஸ்ட் என்டர்டெயின் மென்ட் நிர்வாகி ஜான் கால்வின், மருத்துவர் கே. வாணி, மெட்ரோ ஹவுசிங் போர்டு செயலாளர் கார்த்தி கேயன், குல்மோஹர் மைத்ரி நிர்வாகி ஜெயஸ்ரீ, வழக்கறிஞர்கள் லட்சுமி, பிரபு ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.