districts

மலை மக்களை துன்புறுத்தும் வன அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூர், ஜூன் 11- திருப்பத்தூரில் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வனத்துறை அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை யில் நடுகுப்பம் கிராமத்தில்  காளி வயது 32,  இவரது மகன் காளிதாஸ் (16) ஒரு கண்பார்வை  இழந்தவர், மகள் அனிதா(13) ஒரு காலை  இழந்தவர். இந்த இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர், தனது நிலத்தில் பயன் படாத வெள்ளைப் பூ செடி, கொடிகளை இம்மாதம் 8 ஆம் தேதி சுத்தம் செய்து தீ  வைத்து கொளுத்தினர். அப்போது, திருப்  பத்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரியும், சிங்காரப் பேட்டை ரேஞ்சரும் அவ்வழியாகச் சென்றனர். அங்கு என்ன புகை வருவது என்று பார்த்துள்ளனர். அதைப் பற்ற வைத்தது யார் என்று கேட்டு  அழைத்துவரச் சொல்லியிருக்கிறனர். காளி யும் சென்றுள்ளார்.

அங்கு என்ன செய்கிறீர் கள் என்று காளியை மிரட்டி உள்ளனர். மேலும்,  காட்டிற்கு தீ வைத்து இருக்கிறாய் என்று குற்றம் சுமத்தி  ஜவ்வாது மலையில் உள்ள  வனத்துறை  அலுவலகத் திற்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தக வலைக் கேள்விப்பட்டு ஜவ்வாது மலைவாழ்  மக்கள் சங்க தலைவர் ஜெயராமன், செயலா ளர் ஜெயன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர்  அந்த வனத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது அங்கிருந்த வனதுறை அதிகாரிகள் காளி என்பவர் மீது தீ வைத்த குற்றத்திற்காக 25 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறினார். சங்கத் தலைவர்  கள் அதை கட்ட முடியாது என்று சொல்லி அன்று மாலை வரை முற்றுகை நடத்தி அவரை விடுவித்து கொண்டு வந்துள்ளனர். மீண்டும் 9 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட  வனத்துறை அலுவலகத்திற்கு வருமாறு  அழைத் துள்ளனர். காளியும், சங்க நிர்வாகி களும்  சென்று வனத் துறை அதிகாரிகளுடன் மாலை வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது ரூபாய் 25 ஆயிரத்தை அப ராதமாக கட்டவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அதிகாரிகள் வலியுறுத்தி வற்புறுத்தி யுள்ளனர். ஒரு பைசா கூட எங்களால் பணம் கட்ட முடியாது மீண்டும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயா நிதி,  விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர்  பி.சக்திவேல், ஜவ்வாது மலை வாழ் மக்கள்  சங்கத் தலைவர் லட்சுமன ராஜா ஆகியோர் கூறுகையில்," நடக்காத ஒரு சம்பவத்திற்கு சாதாரண மக்களை துன்புறுத்து கிறார்கள்.

இதை அனுமதிக்க மாட்டோம்" என்றனர். இந்த கொரோனா காலத்திலும் அபரா தம் விதிப்பது, நிலத்தை விட்டு வெளியேற்று வது, மிரட்டுவது போன்ற அதிகாரிகளின் நட வடிக்கைகள் என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறிய சங்கத் தலைவர்கள் இந்த நட வடிக்கைகளை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். வருவாய் துறைக்கு சொந்த மான நிலத்தில் குறிப்பாக பட்டா நிலத்தில் வேலை செய்தாலும் அது வனத்துறைக்கு சொந்தமான இடம் என்று சொல்லி அச்சு றுத்து கின்றனர். இப்படியான நடவடிக் கையை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இது மலைவாழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும். மூன்று தலைமுறைக்கும் மேலாக அவர்  கள் வாழ்ந்து வரக்கூடிய மலை பகுதி. அந்த  மலை பகுதி மக்களுக்கு 2006 வன மசோதா  சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். இந்தப்  பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு  சிங்காரப் பேட்டை, திருப்பத்தூர் வன அதிகாரி  ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.