கரூர், மார்ச் 13 - கரூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்க ளில் பணி நேரம் முடிந்தும் இரவு நேரத்தில் அதிக நேரம் பணிசெய்ய வற்புறுத்தும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. உலக மகளிர் தின விழாவையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பிரவீனா வரவேற்றார். மாநில துணைத் தலை வர் மு.செல்வராணி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க சைலஜா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் ரத்னமாலா, கரூர் மாவட்ட செயலாளர் சாந்தி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் நிறைவுரையாற்றி னார். பெண் ஊழியர்களின் பாலியல் வன்கொ டுமை சார்ந்த புகார்களை விசாரித்து விரைந்து முடிக்க கூடிய வகையில், புகார் கமிட்டியை மாவட்ட நிர்வாகம் அமைத்திட வேண்டும். அதிக பெண் ஊழியர்கள் அனைத்து துறை களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்க ளுக்காக கரூர் மாவட்டத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டி மாதத் திற்கு ஒருமுறை கூடி ஊழியர்களின் பிரச்ச னைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழி யர்களுக்கு பெண்கள் விடுதி மற்றும் குழந்தை கள் காப்பகம் அரசால் உருவாக்கப்பட்டு நடத் தப்பட வேண்டும். கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களை அலு வலக நேரத்திற்கு மேல் இரவு நேரங்களி லும், விடுப்பு நாட்களிலும் பல்வேறு அலுவலர் கள் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்திட உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.