districts

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் ரூ.4,710 கோடி நிதி

சென்னை, ஏப். 1- மாதவரம் பால் பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் 2ஆவது கட்ட திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கழகம் ரூ 4,710 நிதி உதவி செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதை கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. அடுத்து 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 2-வது கட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஜப்பானிடம் நிதியுதவி கேட்கப்பட்டது. அதன்பேரில் ஜப்பான் சர்வதேச கழகம் நிதியுதவி வழங்க சம்மதித்துள்ளது. வியாழனன்று இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன்படி ஜப்பானில் இருந்து ரூ.4,710 கோடி நிதியுதவி கிடைக்க உள்ளது.இது தவிர தமிழகத்தில் பசுமை திட்டங்களுக்காக ரூ.680 கோடி கடனுதவி ஜப்பான் வழங்கியுள்ளது.