districts

img

சிபிஎஸ்இ பள்ளியில் பெண் ஊழியர் மர்ம மரணம் நேர்மையான விசாரணை வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.13- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள அழகுஜோதி அகாடமி சிபிஎஸ்இ  பள்ளி யில் பணியாற்றிய  பெண்  ஊழியர் ஒருவர் மர்மமான  முறையில் மரணமடைந்தி ருப்பது குறித்து, மாவட்ட  காவல்துறை விசாரணை யை நேர்மையாக நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  செம்பனார்கோவில் கரு வாழக்கரை மேலையூரில்  அழகுஜோதி அகாடமி என்ற பெயருடன் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில், மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு மண்ணிப்பள்ளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி கிரிஜா  (45) என்பவர் அட்டெண்ட ராக பணிக்காக தேர்வு செய்  யப்பட்டு வேலைக்கு சேர்ந் துள்ளார்.  ஆனால், தேர்வு செய்யப்  பட்ட பணியை தராமல் அந்த பள்ளியில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை மேய்க்கும்  வேலைக்கும் பயன்படுத்தி யதால் மனஉளைச்சலுடனே வேலை செய்து வந்த நிலை யில், செவ்வாய்யன்று காலை வழக்கம்போல் கிரிஜா பள்ளிக்கு சென்றுள் ளார். மதியம் கிரிஜாவின் உடல்நிலை சரியாக இல்லாத  காரணத்தால் அவரை சிகிச்சைக்காக மயிலாடு துறை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்  றுள்ளதாக பள்ளி நிர்வா கத்திடம் இருந்து கிரிஜாவின் குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக கிரிஜாவின் குடும்பத்தினர் அரசு மருத்து வமனைக்கு சென்று பார்த்த னர். அங்கு கிரிஜா இறந்து சவக்கிடங்கில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளனர். கிரிஜாவின் சாவில் மர்மம் இருப்பதாக வும், அவரது இறப்பு குறித்து சரியாக தகவல் தெரிவிக் காத பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளித்தன் பேரில், செம்பனார்கோயில் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார் கோவில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ் கூறும் போது, அழகுஜோதி அகா டமி சிபிஎஸ்இ பள்ளியில்  தொடர்ந்து பல்வேறு சம்ப வங்கள் நடந்து வருகின்றன. விதிமீறல்களை தொடர்ந்து செய்து வரும் அப்பள்ளியில் தற்போது நிகழ்ந்துள்ள பெண் ஊழியரின் மர்ம மர ணம் குறித்து உரிய விசார ணையை நேர்மையான முறையில் நடத்திட மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரி ழந்த ஊழியர் கிரிஜாவின் குடும்பத்திற்கு நிவார ணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.