சென்னை:
கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான விரிவாக்கப்பணி களை ஒன்றிய பாஜக அரசு உடனடி யாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழுஉறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத்மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள திருநெல் வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. கடந்த 2016 இல் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்த போதே எழுந்த மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அதில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல்கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.ஒரே இடத்தில் இத்தகைய பல அணு உலைகளை நிர்மாணித்து அணு உலை பூங்கா அமைப்பதால் ஏற்படும் பிரச்சனைகளும், ஆபத்துகளும் குறித்து பட்டியலிட்டு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை பாஜக அரசு துளியும்கண்டுகொள்ளாமல் ஒரு தலைபட்சமாகவே இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை பூங்காக்களால் உருவாகும் சுற்றுச் சூழல் அபாயம், இவற்றால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய்கள், அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள், இதனால் பெரும்விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு என பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. ஏற்கனவே ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு அணு உலை பூங்காக்களில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக ஏராளமான மக்களும் உயிரிழப்பிற்கு ஆளாகியுள்ளார்கள்.
எனவே இந்நிலையில், கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய அணுஉலைகளை தவிர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் மூன்று, நான்கு அணு உலைகளுக்கான நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, தற்போது துவங்கப்பட்டுள்ள ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான பூர்வாங்கபணிகளையும் உடனடியாக கைவிடவேண்டுமென ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுப்பதோடு, இத்தகைய பணிகளை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளில் தமிழக அரசும் இணைந்து நிற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.