districts

img

நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்,நவ.4- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவர் கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன்,  சிஐடியு ஆட்டோ வட்டச் செயலாளர் விஜய், விதொச மாவட்ட பொருளாளர் செல்லையா உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு, கன மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,  பெரிய பட்டியலிலிருந்து சி.முட்லூர் வரை நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும்,  சேதமடைந்த பயிர்களையும் முழு கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ20 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கைகளை  முன்மொழிந்து கோசங்களை எழுப்பினர்.