செங்கம், செப். 12- செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் அமைந்துள்ள காரிய மங்கலம் பெரிய ஏரியில் தொடர்ந்து ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவ சாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. செங்கம் திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலை பணி தேவைக்காக கரிய மங்கலம் பெரிய ஏரியிலி ருந்து மண் எடுத்துக் கொள்ள அனு மதி வழங்கப்பட்டு ஏரி மண் எடுத்துச் சென்றதாக கூறப் படுகிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக சுமார் 5க்கும் மேற்பட்ட லாரிகள் பகல் நேரத்திலேயே ஏரி மண்ணை சுரண்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. கரியமங்கலம் ஏரி தண்ணீரை நம்பி கரிய மங்கலம் சுற்றுவட்ட பகுதி களில் பல நூறு ஏக்கர் விவ சாய நிலங்கள் உள்ளன. ஏற்கனவே கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரியிலி ருந்து வர வேண்டிய உபரி நீர் கால்வாய் பிரச்சனை கார ணமாக தண்ணீர் வரத்து சரிவர வராத சூழல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழை யின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது. மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். எனவே உரிய அனுமதி யின்றி ஏரி மண் எடுத்துச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.