districts

ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்

திருவள்ளூர், ஜன.11- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவள்ளூர் வட்ட முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் சனிக்கிழமையன்று (ஜன 10), திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் பி.கேசவன் தலைமை தாங்கினார்.வடக்கு கோட்ட செய லாளர் எஸ்.பூபாலன் அஞ்சலி தீர்மானத்தை  வாசித்தார். திட்ட செயலாளர் ஜி.பட வேட்டான் வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.ஜெய்சங்கர் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.  நிர்வாகிகள் தேர்வு திருவள்ளூர் வட்டார தலைவராக ஏ.ஈஸ்வரன், செயலாளராக வி.இ.சம்பத், பொருளாளராக ஆர்.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிப் -12 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற்ற செய்ய  வேண்டும்,  மின்சார சட்டம் 2025 ஐ ரத்து செய்ய  வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.