பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: டியூஜெ கோரிக்கை
திருவள்ளூர், மார்ச் 8- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசு வழங்க, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியூஜெ), மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் திருவள்ளூர் மாவட்ட பேரவை புதனன்று (மார்ச் 5), செங்குன்றத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் வி.பி.கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் பெ. ரூபன் வேலை அறிக்கை விவரங்களை தெரிவித்தார். மாவட்ட செயலாளர் எம்.ஏ.கருணாநிதி வரவேற்றார். மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர்கள் ஏ.சுரேஷ், கே. முத்து, மாநில பொருளாளர் வி. ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர்கள் பி. ஆர். வேளாங்கன், ஏ.தமிழ்செல்வன், மாநில இணை செயலாளர்கள் ஆர்.முருககனி, ஏ.ஆர். லட்சுமணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மாவட்ட தலைவர் பி. தேவேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் வெ. கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். திருவள்ளூர் மாவட்டத்தில் டியூஜெ -வில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காப்பீடு வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. தீர்மானங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வரும் 60 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்,வட்டார அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக வி.பி.கோவிந்தராஜுலு, பொதுச் செயலாளராக பெ.ரூபன், பொருளாளராக என்.முனுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண அட்டை புதுப்பித்தல்
கடலூர், மார்ச் 8- கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண அட்டைகள் புதுப்பித்தலுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர்தம் செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் மார்ச் 15 அன்று நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுபித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026ஆம் நிதியாண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் 15.03.2025 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவர்கள், இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம்-4, ஆதார் அடை யாள அட்டை நகல் மற்றும் பழைய இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்து கொண்டு இலவச பேருந்து பயண அட்டையை புதுபித்து பயனடையலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
முதலீடு செய்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பணம் பெற்றுக்கொள்ளலாம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
கடலூர், மார்ச் 8- சுருதி ஆட்டோ சேவிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் ஆவ ணங்களை சமர்ப்பித்து தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரி வித்துள்ளார். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் மெயின் ரோடு என்ற முகவரியில் கொங்கரேவ் மகன் காளிதாசன், மாணிக்கம் மகன் ராஜ்குமாரால் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரு வாளர்கள் சுருதி ஆட்டோ சேவிங் ஸ்கீம் என்ற நிதி நிறுவனத்தின் மூலம் 312 முதலீட்டாளர்களிடம் இருந்து தொகை வசூல் செய்து, முதலீட்டாளர்க ளுக்கு மீள அளிக்கப்படா மல் இருந்தது. கடலூர் பொருளாதார குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெரும் பாலான முதலீட்டாளர்க ளுக்கு தொகை திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. தற்போது வரை முதலீட்டுத் தொகை திரும்ப பெற்றுக் கொள்ளாத முதலீட்டா ளர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தகுதி பெற்ற அலுவலர், மாவட்ட வரு வாய் அலு வலர் அவர்க ளிடம் நேரில் தொடர்பு டைய ஆவணங்கள் தாக்கல் செய்து உடனடி யாக முதலீட்டுத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
பயணிகள் அவதி
சென்னை, மார்ச் 8 தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்ஆப் செயலி மூல மாக டிக்கெட் எடுக்க முடியா மல் பயணிகள் அவதி அடைந்த னர். சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க காகித டிக்கெட் இன்றி, வாட்ஸ் அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களில் காத்திருக்கா மல், மொபைல்போனில் எளிமையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட தால், வாட்ஸ் அப் செயலி வழி யாக டிக்கெட் பெறும் வசதியில் வெள்ளியன்று காலை 8.30 மணி அளவில் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பிற ஆன்லைன் தளங்கள் மூல மாக, டிக்கெட்களை பெற மெட்ரோ ரயில் நிறுவனம் அறி வுறுத்தியது. இதையடுத்து, பேடிஎம்., சிங்கார சென்னை அட்டை மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களில் எந்த பாதிப்பும் இல்லாமல், டிக்கெட் எடுத்து பயணிக்க முடிந்தது. அதேநேரத்தில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இடமாற்றம்
சென்னை, மார்ச் 8- சென்னை குடிநீர் வாரியம் வெள்ளியன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பணி மனை அலுவலகம் – 107, கதவு எண்.4, நரசிம்மன் தெரு, அமைந்தகரை என்ற முக வரியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல், கதவு எண்.65, தண்ணீர் தொட்டி சாலை, எம். எம்.டி.ஏ காலனி, அரும் பாக்கம் என்ற புதிய முகவரி யில் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி கடன் உதவி
கடலூர், மார்ச் 8- கடலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.76.52 கோடி கடன் உதவியை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நடந்த விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் மகளிர் திட்டம் மூலம் 938 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உள்பட மொத்தம் 1,163 பயனாளிகளுக்கு ரூ.80.67 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சிந்தனைச்செல்வன், மேயர் சுந்தர்ராஜன், துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜெய்சங்கர், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மாவட்ட தாட்கோ மேலாளர் லோக நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.