ராணிப்பேட்டை, மார்ச் 26- ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள டாடா இன்டர்நேஷ்னல் பாச்சி ஷூ டிவிசன் நிர்வாகம் தொழிற்சங்கம் வைத்த காரணத்திற்காக 2 ஆண், 2 பெண் உள்ளிட்ட 4 தொழி லாளர்களை பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்தும், பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் உடனடியாக தொடர் வேலை வழங்கக் கோரி யும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த ராணிப் பேட்டை மாவட்ட காவல் துறையைக் கண்டித்து ராணிப்பேட்டை முத்து கடையில் வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கம் (சிஐடியு) மாவட்ட தலைவர் என்.காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், ஊரக வளர்ச்சி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.காசி, விச மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்க மாவட்ட செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன் மற்றும் கே.ரவிசந்திரன் (போக்குவரத்து ஊழியர் சங்கம்), ஆர்.மணிகண்டன் (சிஐடியு), தா.வெங்கடேசன் (எல்ஐசி முகவர்கள் சங்கம்) ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.