கோவை, மே 31 – அரசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கு, இல்லையேல் முழு ஊதியம் கொடு என்கிற கோரிக்கையை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயி றன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங் களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கை அரசு பிறப்பித்தது. தமி ழகத்திலும் இந்த ஊரடங்கு தொடர் கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர் களின் ஊதியத்தை பிடித்தம் செய் யக்கூடாது என மத்திய, மாநில அர சுகள் அறிவித்தது. அதேநேரத்தில் இது அரசு நிர்வாகத்தின் கீழ் இயங் கும் துறைகளுக்கு பொருந்தாது என்கிற வகையில் அரசு போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் ஊதிய பிடித் தம் செய்ய முனைகிறது. அரசு அறி வித்து ஊரடங்கு காலத்தின் ஒருபகு தியை ஊழியர்களின் சொந்த விடுப்பு என பதிவு செய்து சம்பள பட்டி யல் தயாரித்துள்ளது.
இது ஊழியர்க ளிடையே கொதிப்பை உருவாக்கி யுள்ளது. இதனையடுத்து அரசு போக்குவரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் கானொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அரசு போக்குவ ரத்து கழக நிர்வாகத்தின் நடவ டிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்திற்கு முழு ஊதியம் தரப்பட வேண்டும். அரசு பேருந் துகளை இயக்கி வேலை கொடு இல் லையேல் முழுமையான ஊதியம் வழங்கு என்கிற கோரிக்கையை முன் வைத்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன்தொடர்சியாக கோவையில் அனைத்து பணிமனை முன்பு ஞாயி றன்று அரசு போக்குவரத்து தொழி லாளர்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தின் ஊழியர்களும் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். விடுப்பு கழித்து ஊதியம் வழங்கும் முறையை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். பேருந்து களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முழக்கங்களாக எழுப் பினர். முன்னதாக கோவை சுங்கம் பகுதி பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர். இதேபோல் மாவட்டம் முழு வதும் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு தலைவர்கள் கோபால், பர மசிவம் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை போக்குவரத்துப் பணிமனை முன்பு கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக காத்திருப்பு போராட்டத் திற்கு சிஐடியு மண்டல பொதுச் செய லாளர் பி.செல்லதுரை தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் சிஐ டியு மண்டல பொருளாளர் என்.சுப்பி ரமணி, துணைப் பொதுச் செயலாளர் தேவநேசன், செயலாளர் மனோக ரன், எல்பிஎப் சங்கத்தின் திருப்பூர் கிளை செயலாளர் பழனிசாமி, ஏஐ டியுசி துணைச் செயலாளர் குமரேசன், டிடிஎஸ்எப் பொன்னுசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்று முழக்கங் களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, அரசு மாநில கூட்ட மைப்பு சங்க நிர்வாகிகளை அழைத் துப் பேசிய நிர்வாகம் ஊதியம் பிடித் தம் செய்யும் நடவடிக்கைகளை திரும் பப் பெற்று ஊதியம் வழங்குவதாகவும் உறுதியளித்தது.
சேலம்
சேலம் மாவட்டத்திலுள்ள 16 பணிமனைகள் முன்பும் போராட் டங்கள் நடைபெற்றது. இதில் மெய் யலூர் பணிமனையில் கோட்டப் பொதுசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சேகர் உள்ளிட்டு பலர் பங்கேற் றனர். பள்ளப்பட்டி பணிமனையில் துணை பொதுசெயலாளர் செந்தில் குமார், சிஐடியு நிர்வாகிகள் கிருஷ் ணன், சுப்ரமணி, எல்பிஎப் சார் பில் ஸ்ரீதர், கலைசெல்வன், ஏஐ டியுசி சார்பில் மாயக்கண்ணன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். ஓம லூர் பணிமனையில் கோட்டத் தலை வர் செம்பன் தலைமையிலும், தார மங்கலத்தில் கோட்ட பொருளாளர் சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் மேட்டூர் பனிமனையில் சுப்ரமணி, நாமக்கல் பணிமனையில் பழனிசாமி, ஆத்தூர் பணிமனையில் பாண்டியன் தலை மையிலும் போராட்டங்கள் நடை பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.