tamilnadu

img

வாழ்வாதாரத்தைப் பறிப்பதா! ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆவேசம்

அவிநாசி, நவ. 20- அவிநாசி அருகே வஞ்சிபா ளையம் ரயில் நிறுத்தத்தில், வெளி யாட்களைக் கொண்டு சிமெண்ட் மூட்டைகளை இறக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதனன்று திருப்பூர் ரயில் நிலைய தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டனர். திருப்பூர் ரயில் நிலையத்தில், சரக்குகளை இறக்குவதற்கு என ஏராளமான சுமை தூக்கும் தொழி லாளர்கள் (கூட்செட்)  உள்ளனர். இவர்கள் ரயில்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணிகளைச் செய்து தங்களது வாழக்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், வழக்கமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறக்கி வைக்கக்கூடிய தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் மூட்டை கள், அவிநாசி அருகே உள்ள வஞ்சிபாளையம் ரயில் நிறுத் தத்திற்கு கொண்டு வரப்பட்டன.  இதையறிந்த திருப்பூர் ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலா ளர்கள், வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், அங்கு சரக்கு ரயிலில் இருந்து வெளியாட்கள் மூலம் சிமெண்ட் மூட்டைகளை இறக்கும் பணியில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில் நிலைய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிமெண்ட் மூட்டைகள் இறக்கப்படாமல் சரக்கு ரயில் வஞ்சிபாளையம் ரயில் நிறுத்தத் தில் நீண்ட நேரம் நிறுத்தி வைக் கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர், சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் ராஜகோபால், முத்துச்சாமி, பழ னிச்சாமி உள்ளிட்டோரிடம் பேச் சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தனியார் சிமெண்ட் நிறுவ னத்தாருடன்  மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவாக, வெளியாட்களைக் கொண்டு சரக் குகளை இறக்க மாட்டோம். ரயில் நிலைய பணிமனைத் தொழிலா ளர்களே சிமெண்ட் மூட்டைகளை  றக்கும் பணியில் ஈடுபடுத்துவது என உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.