சிதம்பரம், அக். 8- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே லால்பேட்டை பேரூராட்சியில் துப்பு ரவு தொழிலாளியாக பணியாற்றும் பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் மன்சூர் ஒரு மையில் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் கடந்த 29 ஆம் தேதி காட்டு மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனையறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலை யத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த அதிகாரி மன்சூர் நடந்த சம்ப வத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னிப்பும் கேட்டார். இனி வரும் காலங்க ளில் துப்புரவு தொழிலாளி பிரச்சனைகளி லும் பேரூராட்சி ஊழியர்கள் பிரச்சனை களில் தலையிட மாட்டேன் எனவும் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி கொடுத்தார். இதனை யடுத்து, புகாரை திரும்பப் பெற்றனர். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் காவல்துறை ஆய்வாளர் காட்டு மன்னார்குடி ராஜா, உதவி ஆய்வாளர் காமராஜ், முன்னாள் பேரூராட்சித் தலைவர் லால்பேட்டை சபி யுல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், நகர் குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.