போக்குவரத்து காவல்துறை சார்பில் மகளிர் தின விழாவையொட்டி கடலூர் டவுன்ஹால் அருகில் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.