districts

img

மத்திய சென்னையில் சிபிஎம் மாநாட்டு நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி துறைமுகம் பகுதி சனிக்கிழமையன்று (பிப்.1) பூக்கடையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் டி.எஸ்.ஜமால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநாட்டு நிதியாக மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவிடம், வியாபாரிகள் அரங்க டி கிளைச் செயலாளர் டி.ஸ்ரீகுமார் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநாட்டு வரவேற்புக் குழு மாவட்டத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் இரா.அருள்குமார், பகுதிச் செயலாளர் ஆர்.குமார் மற்றும் கோ.கோதண்டன், ஏ.அன்வர் சாதிக், கே.வடிவேலன், எல்.விக்னேஷ், வி.செங்கேணி, ஜி.பூமிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.