காஞ்சிபுரம், ஏப். 9- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டம், களக்காட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குருவிமலை கிராமம், ரோட்டுத் தெருவில் வசிக்கும், மணி - சின்ன பொண்ணு வயதான தம்பதியரின் குடிசை வீடு (ஏப்.08) வியாழனன்று, மாலை 5 மணி அளவில் முற்றிலும் எரிந்து தீக்கரையானது. இதில் பாத்திரங்கள், வீட்டு உபகரணங்கள், துணி கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ள நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் முயற்சியால் பாதிக் கப்பட்ட தம்பதியருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப் பட்டது. அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை. கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், சி.சங்கர் சேதம் அடைந்த குடிசையைப் பார்வை யிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். கிளைச் செயலாளர் வி.சிவப்பிரகாசம், அரிகிருஷ்ணன், சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.