சென்னை, மே 17- நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் 30க்கும் மேற்பட்டோர் இருக்கும் குடியிருப்புகள், நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம். இந்த முறையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.