districts

img

தோழர் பலராமன் நினைவேந்தல் ...

தோழர் பலராமன் நினைவேந்தல் ... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த  எஸ்.பலராமனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்  கூட்டம் ஞாயிறன்று (பிப்.2) திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அ.உதயகுமார், சிபிஎம் திருவண்ணாமலை- துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வேல்மாறன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். அபிராமன், தவிச மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பிரகலாதன், இரா.பாரி, எஸ். ராமதாஸ், எ.லட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர் ச.குமரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ். அருண்குமார், கே.ரஜினி ஏழுமலை, பி.லட்சுமணன், தோழர் பலராமன் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.