திருக்கோவிலூர், ஜூலை 6- விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே நடைபெற்று வரும் தரைப்பால கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார். விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூ ராட்சியில், நெடுஞ் சாலைத்துறையின் மூலம், தேவனூர் ஓடை தரைப் பாலம் கட்டப்பட்டு வரு கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வை யிட்டு, ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது, வெள்ள மறு சீரமைப்பு திட்டத்தின்கீழ் விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலையில் தேவனூர் ஓடைப்பகுதியில் ரூ. 1.10 கோடியில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு வார காலத்தில் முழுமை யாக முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவ சேனா, உதவி செயற்பொறி யாளர் தனராஜ், உதவி பொறியாளர் வசந்த பிரியா மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் உடனி ருந்தனர்.