districts

img

கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, அக்.17 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் கரை யோரப் பகுதிகளில் மாவட்ட  ஆட்சியர் இரா.லலிதா  திங்களன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி யில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொள் ளிடத்தில் வெள்ள நீர்  அதிகமாக வருகிறது. இத னால், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அளக் குடி, நாதல்படுகை, வெள் ளமணல்திட்டு, முதலை மேடுதிட்டு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் அதி கமாக வரும்பட்சத்தில், 13 இடங்களில் 450 யூனிட் மணல் இருப்பு, 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 30 ஆயிரம் சவுக்கு மரங்கள்,  7 இடங்களில் பொது மக்களை தங்க வைப்ப தற்காக இரும்பு கூரைகள் கொண்டு தற்காலிக முகாம் என முன்னெச்சரிக்கை நடவ டிக்கை பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.  இந்நிலையில் முன்னெச் சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கொள்ளிடம் ஆய்வு மாளிகையில், கொள் ளிடத்திற்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு பாது காப்பு குழுவினருடன் முன் னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்  ஆலோசனை நடத்தினார்.