districts

கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி

சென்னை,ஏப்.28-  சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. 2012ம் ஆண்டுக்கு பிறகு கோ-ஆப்டெக்ஸ் வணிக  வளாகத்தில் 10 ஆண்டுக ளுக்கு பிறகு கைத்தறி கண் காட்சி  நடந்து வருகிறது. கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் உதய நிதி ஸ்டாலின் எம்எல்ஏ கண் காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி யில், கோ-ஆப்டெக்ஸ் வேட்டிகள், கைலிகள், ஆர்கானிக் கலெக்சஷன், சட்டைகள், ஏற்றுமதி ரகங்கள்  என பிரத்யேக 5 விற்பனை  நிலையங்கள் தொடங்கப் பட்டுள்ளன. பிற மாநில கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மற்றும் தமிழ கத்தில் உள்ள கைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கங்கள் ரகங்களை பார்வைக்கு வைத்துள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட ரகங்கள் உள்ளன. விற்பனை செய்யப்படும் ரகங்களுக்கு சிறப்பு சலுகை யாக 20 விழுக்காடு தள்ளு படி செய்யப்படுகிறது. இந்த கண்காட்சி காலை 10  மணி முதல் மாலை 8.30 மணி வரை நடைபெறும். மே 1ம்  தேதி வரை கண்காட்சி நடக்கி றது. அனுமதி இலவசம்.