மகளிர் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து திருவண்ணாமலையில் மனித சங்கிலி இயக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. மகளிர் துணைக் குழு மாநில அமைப்பாளர் ஏ. மிருணாளினி, தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை சங்க மாநில இணை செயலாளர் நந்தினி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் புனிதா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிமாற் கலைஞன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி நன்றி கூறினார்.