சென்னை,பிப்.13- சென்னையில் கொசுக்க ளின் பெருக்கத்தால் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க சென்னை மாநக ராட்சி நிர்வாகம் தீவிர நட வடிக்கை எடுத்து வரு கிறது. கொசு ஒழிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. ஞாயிறன்று(பிப்.12) ஒரே நாளில் மழைநீர் வடி காலில் 250 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 239 கி.மீ நீளத் திற்கு கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில் 58.34 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும், 2,919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக் கும் எந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப் பும் பணியும் மேற்கொள்ளப் பட்டன. இந்நிலையில், மாநக ராட்சி ஊழியர்கள் செல்ல இயலாத ஆறு, கால்வாய் பகுதிகளில் டிரோன்களை அனுப்பி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திங்களன்று ஓட்டேரி நல்லா கால் ்வாய், ரயில்வே கால்வாய், ஏகாங்கிபுரம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் கால்வாய் ஆகிய பகுதி களில் டிரோன்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக திங்களன்று(பிப்.13) காலையில் தொடங்கிய இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6 டிரோன்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ராயபுரம் மண்டலம் ஸ்டான்லி நகர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால் வாயில் படகின் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் சென்று ஆகாயத்தாமரை களை அகற்றி கொசுப்புழு கொல்லி மருந்து தெளித்த னர். அடுத்த 10 நாட்களில் இந்த பணிகள் மிகவும் வேகமாக நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.