districts

வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி

சென்னை,ஏப்.4- சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து மற்றும்  கேளிக்கை வரி செலுத்தாத நிறுவனங்கள், ஓட்டல்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்று மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு இருமுறை  வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-22 ம்  நிதி ஆண்டில் மட்டும் 8.20 லட்சம் பேரிடம் இருந்து ரூ.778.07 கோடி சொத்து வரியும், ரூ.462.35 கோடி தொழில்  வரியும், ரூ.57.28 கோடி இதர வரியும் என 2021-22 ஆம்  நிதி ஆண்டில் ரூ.1,297.70 கோடி வரியாக வசூலிக்கப் பட்டுள்ளது.  தாஜ் கன்னிமாரா ரூ.16 கோடியே 90 லட்சமும், ஆர்.ஆர்.இன்போடெக் ரூ.9 கோடியே 34 லட்சமும், எச்.சி.எல் டெக்னாலஜி (அம்பத்தூர்) ரூ.2 கோடியே 88 லட்சமும், பெர்டாஸ் ஹோட்டல் ரூ.2 கோடியே 15 லட்சமும், சிட்டி டவர்  ஓட்டல் ரூ.2 கோடியே 1 லட்சமும், சிடிஎஸ் ஸ்டாண்டர்டு டவர்ஸ் ரூ.61 லட்சமும், எம்.எஸ்.சிட்டி ஹோம் ரூ.62 லட்சமும் சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.