சென்னை, நவ. 18- திருவொற்றியூர் ராம நாதபுரத்தில் ஐடிசி நிறு வன உதவியுடன் புதிய வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டில் ராம நாதபுரம் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். மாண வர்களுக்கு போதுமான வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் இல்லாத தால் மாணவர்கள் சிரமப் பட்டனர். இந்நிலையில் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டி டமும், கழிவறை செய்து கொடுக்குமாறு மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் ஐடிசி நிறுவனத்தி டம் கோரிக்கை வைக்கப் பட்டது. அதேபோல் எர்ணா கரில் உள்ள அங்கன்வாடி மைத்திற்கு தனி கழிப்பறை, கை கழுவும் இடத்தில் குழாய் அமைக்க வும் கோரிக்கை வைக்கப் பட்டது. இதையடுத்து ஐடிசி நிறு வனம் சார்பில் ராமநாதபுரம் பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை 7.5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளை பொது மேலாளர் முரளி தரன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், தலைமை ஆசிரியர் முத்துசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.