districts

சென்னை விரைவு செய்திகள்

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: 2 பேர் கைது

வானூர், ஜூன் 13 - விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக இரு வரும் அடிக்கடி மோதிக் கொண்டுள்ளனர். இதனை யடுத்து ஆரோவில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி திங்ளன்று (ஜூன் 13) அதி காலை ஜெயச்சந்திரன், காத்வராயன் வீட்டுகளில் அதிரடி சோதனை சோதனை நடத்தினர். அப்போது இருவர் வீட்டி லிருந்தும் தலா4 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இதனை யடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கார் கவிழ்ந்து ஒருவர் பலி,  6 பேர் படுகாயம்

திருப்பத்தூர்,ஜூன் 13 - பள்ளிகொண்டா அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானர், 6 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். குடும்பத்தோடு திருப்பதி சென்று திங்களன்று (ஜூன் 13) காலை வாணியம்பாடி நோக்கி  காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நிலத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 60 வயது கற்பகம் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.


கைதி மரணம்: மனித உரிமை ஆணையம் வழக்கு

சென்னை, ஜூன் 13 - விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு  செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில்  பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


சிறையில் கைதிகளுக்கு கஞ்சா: காவலர் பணியிடை நீக்கம்

வேலூர், ஜூன் 13 - வேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் சிறையில் கைதிகள் கஞ்சா செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர். சிறைக்காவலர்கள் சோதனையில் கைதிகளின் கழிவறைகள் மற்றும் பூங்கா பகுதியில் மறைத்து வைக்கப்படும் கஞ்சா செல்போன் பறிமுதல் செய்யபடுகிறது. இந்நிலையில் சிறையில் தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் சிறைக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை மீறி கஞ்சா, செல்போன் ஆகியவை எப்படி சிறைக்குள் வந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டது. சிறை காவலர்கள் உதவி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வர முடியாது என்பதால், இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.