districts

சென்னை முக்கிய செய்திகள்

கொரோனாவை குணப்படுத்தும் மரபணு மருந்து கலவை

சென்னை, மே 29- சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளான காவேரி மற்றும் கிளினிக்கல், குளோபல் ஹெல்த் சிட்டி ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் நோய் எதிர்ப்பியான மரபணு மருந்து கலவை மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வெற்றி கண்டுள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவமனைகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது: ‘காசிரிவிமாப்’ மற்றும் ‘இம்தேவிமாப்’ ஆகிய இரு ஆய்வக ஆன்டிபாடிகள் கலவைதான் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. கொரோனா ஆரம்ப கட்டத்தில் லேசான அறிகுறிகளை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கும்போது, இது கொரோனா வைரசின் பெருக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனால் நோய் தீவிரம் அடைவதையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தவிர்க்கிறது. அதேபோல் சிறுநீரக செயலிழப்பு, ஆரம்பத்தில் புதிதாக கண்டறியப்பட்ட ஒரு புற்று நோயாளி, கடுமையான கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் காவிரி மருத்துவமனையில் முதன்முதலில் இந்த சிகிச்சை பெற்று குணம் அடைந்து இருக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

 சென்னை, மே 29- குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் குடியிருப்பு பகுதிக்குள்  கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்துருவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் அந்த பகுதியில் சென்று கண்காணித்தனர். அப்போது விஜி (38), அவரது சகோதரர் வினோத் (23) ஆகியோர் அவர்கள் வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் இருந்த 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட  ஊறலை பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எளியவர்களுக்கு உணவு வழங்கல்

அறந்தாங்கி, மே 29- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக நான்காம் நாளாக ஊரடங்கு காலத்தில் உணவுக்கு சிரமப்படும் 100 பேருக்கு கட்டு மாவடி முதல் மீமிசல் வரை இலவச மதிய உணவு வழங்கப் பட்டது. ஆதரவு இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதாரப் பணியா ளர்கள், ஊர்க்காவல் படை உள்ளிட்ட முன் களப் பணியா ளர்களுக்கும் வழங்கப்பட்டது. 

காட்டுவாய்க்காலை தூர்வாரும் பணி தொடக்கம்

முசிறி, மே 29 - திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடு வெட்டி ந.தியாகராஜன் விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்று  போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து  உமையாள்புரம் காட்டுவாய்க்காலினை தூர்வாரும் பணி யினை சனிக்கிழமை துவங்கி வைத்தார்.  உமையாள்புரம், மாங்கரைபேட்டை, வெள்ளூர், சாளப்பட்டி, சேந்தமாங்குடி, அந்தரப்பட்டி என முசிறியில்  இருந்து கொடுந்துறை வரையிலான சுமார் 9 கிலோமீட்டர் நீள முள்ள இந்த காட்டுவாய்க்காலை தூர்வாரி விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய வழிவகை செய்ய உடனே நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி விவசாயிகள் திரண்டு வந்து நன்றி தெரிவித்தனர்.

கஞ்சா பதுக்கல்: ஒருவர் கைது

மயிலாடுதுறை, மே 29 - செம்பனார்கோவில் பரசலூர், திருவள்ளுவர் தெருவை  சேர்ந்த மயில்வாகனன் (36) தனது வீட்டில் 1.250 கிலோ  கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நடத்திய  சோதனையில், அவரது வீட்டில் இருந்த 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது  செய்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, மே 29- திருச்சிராப்பள்ளி கோ-அபி சேகபுரம் கோட்டம், ஸ்ரீரங்கம்  கோட்டம் அலுவலகத்தில் கொ ரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகள் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கபசுரகுடிநீர் மற்றும்  நோய் எதிர்ப்பு பெட்டகம், பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பூசி போடும் பணி  தொடக்கம் ஆகியவற்றை மாவட்ட  ஆட்சியர் சிவராசு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு சனிக்கி ழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அமைச்சர் கே.என்.நேரு. கூறுகையில், தமிழக முதல்வர், மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வெள்ளி யன்று காணொலிக் காட்சி வாயி லாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 4, 5 மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் நோய்தொற்று குறையா மல் உள்ளது. இதனை சீர் செய்வ தற்காகத்தான் சனிக்கிழமை முத லமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று நேரடி யாக ஆய்வு செய்ய உள்ளார். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஆரம்ப  காலத்தில் நாள்தோறும் 1600  பேருக்கு என்ற நிலை இருந்தது.  தற்போது அது 1200 ஆக குறைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 ஆக்சி ஜன் வசதியுடன் கூடிய படுக்கை வச திகள் காலியாக உள்ளது. பொது மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு கொடுத்தால் நோய் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்றார்.