பழவேற்காடு, ஜூலை 11- பழவேற்காடு ஏரியில் மீன் பிடி தொழில் செய்வ தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சி யர் மற்றும் மீன்வளத் துறை யினரிடம் திங்களன்று (ஜூலை 11) புகார் அளித் துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை அடுத்த கோட்டை குப்பம், நடுகூர் மாதா குப்பம்,ஆண்டி குப்பம்,பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புது குப்பம், அண்ணாமலைச் சேரி குப்பம், அவுரிவாக்கம் மேல் குப்பம்,அவுரிவாக்கம் கீழ் குப்பம் ஆகிய கிராம மக்கள் பூர்வீகமாக பழ வேற்காடு ஏரியில் மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலில் மீன்பிடி தொழில் செய்யும் கூனங்குப்பம் கிராமத்தினர், மேற்கண்ட 10 கிராம மீன வர்களுக்கு உரிமையான தொழில் (பாடு) கடல் வலை களான இறால் வலை,நண்டு வலைகளை விட்டு தொழில் செய்யவிடாமல் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த ஜூன் 20 ம் தேதி மீன்வளத் துறையில் மனு கொடுத்த தாகவும் ஆனால் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் மேல் குறிப் பிட்ட 10 கிராம மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் இருந்து வருவதாகவும், மேலும் தவறான வழியில் தொழில் செய்யும் கூனங்குப்பம் கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி கோட்டா ட்சியர் அலுவலகத்திலும், மீன்வளத்துறை உதவி இயக்குநரிடமும் மீனவ கிராம நிர்வாகிகள் மீண்டும் புகார் மனு அளித்தனர். இதனால் இந்த இரு தரப்பு மீனவ கிராமங்க ளுக்குள் மோதல் ஏற்படக் கூடிய சூழல் உருவாகி இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.