சென்னை, நவ. 12- வணிகர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அளித்தனர். அந்த மனுவில், கார்ப்பரேட் நிறு வனங்கள் லூலூ மால், டி மார்ட், அமேசான் போன்றவை சில்லரை வணிகத்தை முழுமையாக அழித்துவிடும் முன் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து இந்திய பாரம்பரிய வணிகம் தொடர்ந்து நடைபெறவும், சங்கலித்தொடர் வணிகத்தால் அனைத்து நிலை வணி கர்களும் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்டங்க ளால் பாதிக்கப்படும் நில கட்டிட உரிமை யாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது போல், பாதிக்கப்படும் வணிகர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை உரிய வழிகாட்டுதல்கள் மூலம் வரைமுறை செய்து, அரசுக்கு வருவாய் ஈட்டிடவும், நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு உரிய தீர்வு காணவும், உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், மாதாந்திர மின் கட்டண நடைமுறையை பின்பற்ற உரிய நடவடிக்கை வேண்டும், நக ராட்சி, மாநகராட்சி மார்க்கெட் பகுதிகளில் சிறு, சிறு கடைகளை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு, அந்த இடங்களை வளர்ச்சி திட்டங்களுக்கு உள்ளாக்கும் போது, மீண்டும் அதே இடத்தில் ஏற்கனவே வணிகம் செய்யும் வணிகர்களுக்கு இன்றைய தேதிக்கு ஏற்ப வாடகை உயர்வு செய்து திருப்பி அளிக்க வேண்டும். அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படாத வகையில் வணிகர்களே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். பின்னர் விக்கிரமராஜா கூறுகையில், பட்டாசு தொழிலில் உயிரிழந்த தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிப்பு செய்த முதல மைச்சருக்கும் கோயம்புத்தூரில் தங்கநகை தொழில் பூங்கா அமைத்ததற்கும் வணி கர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டோம். அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து உரிய தீர்வு காணப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, சென்னை ஜுவல்லரி அசோசியேஷன் தலைவர் ஜெயந்தி லால் ஜெ.செலானி, பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார், தமிழ்நாடு தங்கநகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.சபரி நாதன், தமிழ்நாடு தங்கநகை உற்பத்தி யாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராமன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், செயலாளர் எஸ்.ஸ்ரீதர், தமிழ்நாடு தங்க நகை அடகு பிடிப்போர் சங்க செயல் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசலு, பொரு ளாளர் பி.ஸ்ரீராமகுமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.