கோயம்பேட்டில் விற்பனைக்கு குவிந்த ரோஜாக்கள்
சென்னை, பிப்.13- காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ் சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்க ளில் ரோஜா பூக்கள் விதவிதமாக அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதில் 20 எண்ணிக்கை கொண்ட (கொத்து) சிவப்பு ரோஜா- ரூ.450-க்கும், பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் ஒரு பஞ்ச்-ரூ.350-க்கும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விலை 2 மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, கோயம்பேட்டில் இருந்து கிளாம் பாக்கத்திற்கு புதிய பேருந்துநிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் புறநகர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என்கின்றனர்.
மெரினாவில் காதலர் தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, பிப்.13 காதலர் தினம் இன்று உற்சாகமாக கொண்டா டப்படுகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நக ரங்களில் காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். மெரினா கடற்கரையில் கூடும் காதல் ஜோடிகளுக்கு காத லர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திரு மணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க உள்ளனர்.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை, பிப்.13- தி.நகர் மற்றும் வியாசர் பாடி கோட்டங்களில் வெள்ளியன்று (பிப்.14) காலை 11 மணிக்கு மின்நுகர் வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. தியாக ராய நகர் கோட்டத்திற்கு கோடம்பாக்கம் நெடுஞ் சாலை, மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் உள்ள 110 கி.வோ. வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள தி.நகர் கோட்ட இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வியாசர் தபாடி கோட்டத்திற்கு ராம லிங்கர் கோயில் எதிர்புரம் உள்ள 33/110 கி.வோ வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலு வலகத்திலும் நடைபெறும் என மின்வாரியம் வெளி யிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை பூச்சு பெயர்ந்து பயணி காயம்
திருவள்ளூர், பிப்.13- திருவள்ளூரில் திரு.வி.க பேருந்து நிலையம் கட்டி முடித்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த நிலையில் திரு வள்ளூர் பேருந்து நிலை யத்திலிருந்து சென்னை, பூந்தமல்லி, திரு பெரும்புதூர், சுங்குவார் சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக் கோட்டை, பெரியபாளை யம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் வியாழனன்று (பிப்13), பேருந்து நிலையத்தில் வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (59) என்பவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பேருந்துக் காக காத்துக் கொண்டி ருந்தபோது கூரையின் பூச்சு அவர் மீது விழுந்ததில் காயமடைந்தார்.
சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம்
உதவி தமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்டத்திற்கு வெற்றி
வேலூர், பிப்.13 - கேவி குப்பம் வட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தொடர் முயற்சியால் ரூ.10 லட்சம் நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், மேல்மாயில் அடுத்த துருகம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (22). கடந்த டிசம்பர் மாதம் அவரது வீட்டின் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதனால், அந்த பெண்ணின் குடும்பம் பரிதவித்து வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.சாமிநாதன் குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியர், வேலூர் மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதினார். அதில், சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், கேவி.குப்பம் பேருந்து நிலையம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வ ரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை ஏற்கப்பட்டு, வனத்துறை சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கிய முதல்வர் மற்றும் அதி காரிகளுக்கு கே.சாமிநாதன் நன்றி தெரி வித்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேலூர் மாவட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.