districts

img

விழுப்புரம் அருகே புதைத்த பெண் உடல்: மீண்டும் பிரேத பரிசோதனை

விழுப்புரம்,டிச.17- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே புதைத்த பெண்ணின் உடலை  தோண்டி எடுத்து பிரேத பரிசோ தனை செய்தனர். திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை  கிராமத்தைச் சேந்தவர் ரவீந்திரன் (45), இவரது மனைவி சிவகலா  (38). இவர்களுக்கு சிவரஞ்சனி (19) என்ற மகளும், சிலம்பரசன் (17) என்ற மகனும் உள்ளனர். ரவீந்திரன் சென்னை குமணன்சாவடி யிலுள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிசெய்து வருகிறார். இதனால், அனைவரும் சென்னை காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அதே பள்ளியில் பணிபுரியும் மாங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ரவீந்திரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இது சிவகலாவுக்கு தெரிய வந்ததும், இருவருக்கம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டிச.7 அன்று சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்று விட்டார். சிலம்பர சன் வெளியே சென்று விட்டார். கல்லூரி முடித்து மாலை 3 மணிக்கு சிவரஞ்சனி வீட்டுக்கு வந்தபோது தனது தாய் சிவகலா மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரி சோதித்த மருத்துவர்கள் சிவகலா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிவகலாவின் உடலை ரவீந்திரனின் சொந்த ஊரான  தொட்டி குடிசைக்கு கொண்டு வந்து  டிச.8 அன்று அடக்கம் செய்தனர். இந்நிலையில், தனது தாயின்  மரணத்தில் சந்தேகம் இருப்ப தாகவும், அவரின் உடலை பிரேத  பரிசோதனை செய்ய வேண்டு மெனவும் சென்னை பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் சிவரஞ்சனி புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திரனை கைது செய்து சிறையில் அடைத்த னர். பிறகு, புதைக்கப்பட்ட பிணத்தை  வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து  முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனை மருத்துவர் கள் பிரேத பரிசோதனை செய்த னர்.