districts

img

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி: பள்ளி மாணவன் பலி

பொன்னேரி, ஆக. 13- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் படகு சவாரி தடை  செய்யப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி படகில் சென்ற மாணவர் ஒருவர் நீரில் முழ்கி பலியானார். சென்னை அண்ணா நகர், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த  சுரேஷ்  குமார் என்பவரது மகன் லலித் குமார் ( 17) அவரது நண்பர்கள் பிரித்தி விராஜ், ஆகாஷ் உள்ளிட்ட 7 பேருடன்  தடைசெய்யப்பட்ட படகு சவாரி  மேற்கொண்டபோது, கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில்  உள்ள மணல் திட்டில் ஏழு பேரும் இறங்கி குளித்தனர்.  அப்போது லலித் குமார் என்பவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பொன்னேரி தீயணைப்புத்துறை வீரர்கள் அவரது  உடலை தேடி மீட்டனர்.  பின்னர் உடன் வந்த ஆறு பேரையும் பத்திரமாக  மீட்டனர். லலித் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்பாலைவனம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் படகில் சென்று தனது நண்பர்களுடன் குளித்த  போது பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்தசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழவேற்காடு ஏரியில் காவல்துறை அதிகாரிகள் உரிய முறையில் தடை செய்யப்பட்ட படகுப்  பயணத்தை தடுக்காததே இதுபோன்று அடிக்கடி  உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தடையை மீறி படகு  சவாரி மேற்கொள்ளும் படகு ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.