இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காட்பாடி பகுதிக்குழு சார்பில் மதிநகர் அருப்புமேடு நடுநிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றறது. காட்பாடி ரெட்கிராஸ் சங்கத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர். இதில் வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி துறைத் தலைவர் மருத்துவர் பாஸ்கரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பார்த்திபன், நிர்வாகிகள் சங்கர், வெங்கடேஷ், சிரஞ்சீவி, தாலுக்கா செயலாளர் ஆர்.சுடரொளியன், ரத்த வங்கி ஆலோசகர் நந்தகுமார், வட்டத் தலைவர் சத்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.