அண்ணாமலை ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) ஆகியோர் உடனிருந்தனர். மண்டல முதுநிலை மேலாளர் நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.