விழுப்புரம், ஏப். 19- தேசிய அளவிலான தீத் தொண்டு வாரத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனையொட்டி 200 கி.மீ. தொலைவு மிதி வண்டியில் பேரணியாகச் சென்று தீத் தடுப்பு-பாது காப்பு விழிப்புணர்வு பேரணி ஞாயிறன்று (ஏப்.18) விழுப்பு ரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி யது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 20 தீயணைப்பு வீரர்கள் விழுப்புரத்திலிருந்து பேரணி யாக சென்று உளுந்தூர் பேட்டை, வேப்பூர், பெரம்ப லூர் பிரச்சாரம் செய்தனர். திருச்சி தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இந்நிகழ்வில் விழுப்புரம் கோட்ட தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.