districts

img

பழங்குடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி...

சென்னை, பிப்.2- சென்னை  பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை பிரிவு மற்றும் தொடர் கல்வி துறையின் சார்பில் முது நிலை மாணவர்களுக்கான சமூக கல்வி விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தின் நிகழ்வாக பழங்குடி இருளர் மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், தேவைகள், துயர்களை தீர்க்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் ஊனமலை இருளர் குடியிருப்பில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இருளர் பழங்குடி மக்களின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், பல்கலை கழக துறைத்தலைவர் யூஜின் ரோசிட்டா, திருச்சி உதயம் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை அமிர்தராஜ், துணை இயக்குநர் அருட்தந்தை டேனியல் தயாபரன், சென்னை உதயம் சமூகப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மதலை முத்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் ஜெயக்குமார், ஊனமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் சமூக ஆர்வலர் மேத்யூஸ் கலந்து கொண்டனர்.