districts

சென்னை முக்கிய செய்திகள்

பாப்பரம்பாக்கத்தில் ஆட்டோ சங்கம் உதயம்

திருவள்ளூர், ஜன.11- திருவள்ளூர் அருகில் உள்ள பாப்பரம் பாக்கம் கிராமத்தில் புதிய ஆட்டோ கிளை துவக்க விழா நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஜன 10),  நடைபெற்றது. சங்க கொடியை சிஐடியு ஆட்டோ சங்க  மாவட்ட குழு உறுப்பினர்  பி.சி. சங்கர்  வைத்தார். கிளை தலைவர் ஆர்.சங்கர்  தலைமை யில் காவல்துறை முன்னாள் டிஎஸ்பி பாப்ப ரம்பாக்கம் ஊராட்சி முன்னாள்  தலைவரு மான ஏ.வரதராஜன் பெயர் பலகை திறந்து  வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன்,  மாவட்ட துணை பொது செயலாளர் கே.சங்கர் தாஸ் திருவள்ளூர் பகுதி செயலாளர் சரவணன் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில்  கிளை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவராக ஆர்.சங்கர், செய லாளராக பி.பாபு, பொருளாளராக எஸ்.தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்: விமான நிலைய ஆணையம் கோரிக்கை

சென்னை, ஜன. 11-  போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: மீனம்பாக்கம், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிக்கப் படும் பொருட்களால் ஏற்படும் கரும்புகை, அதிகாலை பனி மூட்டத்துடன் இணைந்து ஓடுபாதையை மறைக்கிறது. இதனால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற சேவையை உறுதி செய்ய, பொதுமக்கள் புகையை உண்டாக்கும் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை சார்பில் சூப்பர் பைக் விழிப்புணர்வு பேரணி

சென்னை, ஜன. 11-  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், ‘சாலை பாதுகாப்பு மாதத்தை’ முன்னிட்டு  சூப்பர் பைக் விழிப்புணர்வு பேரணி ஞாயிறன்று நடைபெற்றது. கூடு தல் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் இப்பேரணியைக் கொடி யசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மோட்டார் கிளப் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். அண்ணா சதுக்கத்தில் தொடங்கிய இப்பேரணி காமராஜர் சாலை, காந்தி சிலை, அண்ணா மேம்பாலம் வழி யாகச் சென்று நேப்பியர் பாலத்தில் நிறைவடைந்தது. காவல்துறையின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கை களால், சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 2024-ல் 532 ஆக இருந்தது, 2025-ல் 490 ஆகக் குறைந்துள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து இணை ஆணையாளர் டாக்டர் பி.விஜயகுமார் மற்றும் துணை ஆணையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜன.13 ஆட்சியர் அலுவலகத்தில் குறள் வார விழா போட்டிகள்

விழுப்புரம், ஜன.11- தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் குறள் வார விழாப் போட்டி கள் வருகின்ற 13-ந்தேதி நடக்கிறது. பொதுமக்கள் மட்டும் (அரசு அலுவலர் கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் நீங்க லாக) கலந்துகொள்ளும்  ஓவியப் போட்டி,குறள் ஒப்புவித்தல் போட்டிகள், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வருகிற 13ந்தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள குறள் வார விழாபோட்டிகளில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் பொங்கல் விடு முறை அறிவிக்கப்பட் ்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள தற்போதைய கால அட்டவணையின்படி பின்வரும் நாட்கள் விடு முறையாக அறிவிக்கப் பட்டுள்ளன. ஜன.15 பொங்கல் பண்டிகை, ஜன.16 மாட்டுப்  பொங்கல் மற்றும் திரு வள்ளுவர் தினம், ஜன. 17 காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகியவை அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜன.14 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை இல்லை என்றாலும், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்குவார்கள். ஜன.14 முதல் 17 வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. ஜன.18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இயல்பாகவே விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொடர்ச்சி யாக ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

கிரிக்கெட் போட்டி தொடக்கம் 

 கடலூர்,ஜன.11 -  கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்க நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கிரிக்கட் சங்க மாவட்ட தலைவர் பி.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கடலூர், நெய்வேலி பண்ருட்டி, விருத்தாசலம், உள்ளிட் 16 அணிகள் கலந்து  கொண்டன. ஜன.16 அன்று பரிசு வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார்  போட்டியைதொடங்கி வைத்தார்.  போட்டிக்கான ஏற்பாடு களை கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் கூத்தர சன் தொடங்கி வைத்தார். பயிற்சியாளர்கள் வீரர் கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

சிதம்பரம், ஜன.11- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் திமுக கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞர்களுக்கு மாவட்ட அளவில் கபடி மற்றும் கைப்பந்து  விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றது.  இந்த போட்டியில் கடலூர் திமுக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 ஒன்றியங்களைச் சேர்ந்த கபடி ஆண்கள் பிரிவில் 11  அணிகள், பெண்கள் பிரிவில் 4 அணிகள், கைபந்து  11 அணிகள்  கலந்து கொண்டனர். போட்டியினை     மாநில செயற்குழு உறுப்பி னர் கிள்ளை ரவீந்திரன், மாநில நிர்வாகி மஞ்சு, அண்ணாமலை நகர் பேரூ ராட்சி மன்ற தலைவர் பழனி, குமராட்சி ஒன்றிய செயலா ளர் ராஜேந்திரன், புவனகிரி  நகர செயலாளர் ஜெயச் சந்திரன், கீரப்பாளையம் பாலு, அண்ணாமலைநகர் பேரூராட்சி நிர்வாகிகள் தங்க அன்பரசு, செல்வராஜ், ஆனந்த், வினோத்ராஜ், சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர்கள்  கல்பனா, தாரணி, லதா, சுதா, உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகளை கூறினர்.