districts

img

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கடலூர், ஆக.10- கைதான கணவரை விடுவிக்கக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு திங்களன்று  திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த கூட்டத்தில்  இருந்த ஒரு பெண், தான் கொண்டு வந்தி ருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவரது  குழந்தை மீதும், தன்னுடைய உடலிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரது கையில் இருந்த கேனை பிடுங்கி, அவர் மீது தண்  ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். விசாரணையில்  அவர், குப்பங்குளத்தை சேர்ந்த விக்கி  என்கிற விக்ரம் மனைவி கலைச்செல்வி (வயது 24), அவரது குழந்தை ரட்சிகா(2) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த 16.2.2021 அன்று சுப்புராயலு நகரை சேர்ந்த வீரா என்கிற வீராங்கன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன், போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்பில்லாத விக்கி, அவரது சகோதரர் ராக்கி ஆகி யோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனால் அவர்களை விடுவிக்க கோரி, கலைச்செல்வி தனது குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை சமா தானப்படுத்தி, ஆட்சியரிடம் மனு அளியுங் கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற னர். அதன் பேரில் கலைச்செல்வி மற்றும் அவ ரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தி லும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு சென்றனர்.