தூத்துக்குடி, டிச. 26 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாடார் வீதியைச் சேர்ந்த ராமர் மனைவி பத்மா (40). இவர் தீபாவளி சீட்டு நடத்தி அப்பகு தியைச் சேர்ந்தவர்களிடம் பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் பணத்தை வேறு வழியில் செலவழித்ததால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை யாம். இதையடுத்து சீட்டு கட்டியவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ள னர். இது தொடர்பாக அவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் கள் புகார் அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வந்த பத்மா, தான் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து சிப்காட் போலீ சார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.