சென்னை,நவ.18- சென்னை மெரினா கடற்கரை யில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை தயாராகி வருகிறது. சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதி யோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள், முதி யோர்கள் வீல்சேருடன் சென்று கடல் அலையை ரசிக்க கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது. இந்த சிறப்பு நடை பாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அக லத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல் பரப்பில் மரப்பலகை யால் இந்த சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி செலவில் இந்த நடைபாதை அமைப்பு பணி கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணி கள் அனைத்தும் தற்போது நிறை வடைந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடை பாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடு களை மாநகராட்சி நிர்வாகம் செய்து வரு கிறது. இந்த நடைபாதை வழி யாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதிய வர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.