districts

img

அண்ணா பல்கலை விடுதி, வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை பதிவாளர் அறிவிப்பு

சென்னை, ஜன.5-  அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்ற மில்லை என பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார்.  “கட்டுமானத் தொழி லாளர்கள் வேலைகளை முடித்த பிறகு பல்கலை. வளாகத்தில் தங்கக் கூடாது.பல்கலை. வளாகத்தில் வெளிநபர்களின் வாகனம் கண்டறியப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி குறைகளை கேட்டறிய வேண்டும்” எனவும் பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார்.