இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அண்ணா நகர் பகுதி, குஜ்ஜி தெரு கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி, பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று (ஜன.31) கிளைத் தலைவர் தேவா தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் பரிசுகளை வழங்கி பேசினார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன், செயலாளர் கே.மணிகண்டன், இணைச் செயலாளர் ஆ.பிரியதர்ஷினி, பகுதி தலைவர் பரந்தாமன், செயலாளர் எஸ்.மணிகண்டன், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.