கடலூர், மார்ச் 8- அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் கே.ஜோதி தலைமை தாங்கினார். புதுவை ஆசிரியர் சங்க தலைவர் வத்சலா துவக்க உரை ஆற்றினார். நிர்வாகி கள் இந்திரா, வசந்தி, ரேவதி, சரஸ்வதி, பொன்மணி, மங்களம் ஆண்டாள், நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அனுசியா, முத்தமிழ் செல்வி, ஷீலா, அன்பழகி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். மனோகரன் நிறைவு உரையாற்றினார். மாவட்ட தலைவர்கள் என்.காசிநாதன், பழனி ராமதாஸ், குழந்தைவேலு, பத்ம நாபன், மாநில துணைத் தலைவர் புரு ஷோத்தமன், உள்ளிட்ட கலந்து கொண்ட னர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.