புதுச்சேரி, செப். 2- ஒன்றிய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி சட்டபேரவையில் தீர்மா னம் நிறைவேற்றாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 6 வது நாளான வியாழனன்று கூடிய சட்டப் பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா (திமுக) பேசியதாவது: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பல மாநில சட்டசபை யில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள னர். புதுச்சேரியின் நிலை என்ன என தெரிவிக்க வேண்டும் என கோரி னார். அப்போது பாஜக உறுப்பினர் அசோக்பாபு, “வேளாண் சட்டத்தில் என்ன ஷரத்து விவசாயிகளுக்கு எதி ராக உள்ளது என தெரிவியுங்கள்” என்றார். பாஜகவை சேர்ந்த அமைச்சர் சாய்சரவணன், விவ சாயிகளின் நன்மைக்காகத் தான் சட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி விவசாயி களின் மீதும், விவசாயத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். இந்த வேளாண் சட்டத்தால் புதுவையை சேர்ந்த விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என கேட்டார். இதைத்தொடர்ந்து திமுக, காங்கி ரஸ் உறுப்பினர்கள் எழுந்து பேசும் போது அப்போது குறுக்கிட்டு அமைச் சர்கள் நமச்சிவாயம், சாய்சர வணன் மற்றும் பாஜக உறுப்பினர் கள் சில கருத்துக்களை தெரிவிக்க முயன்றதால் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பேரவை துணைத் தலை வர் ராஜவேலு பலமுறை மணி யடித்து உறுப்பினர்களை சமாதா னப்படுத்த முயன்றார். ஒரே நேரத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேசா தீர்கள் என வலியுறுத்தினார். ஆனா லும் அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் சட்டங்களால் விவசாயி கள் பாதிக்கப்படவில்லை. இடைத்தர கர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். எதிர்க்கட்சித்தலைவர் சிவா, இதற்கு முதல்அமைச்சர் பதில் தரட்டும், அவரின் பதில்தான் எங்க ளுக்கு தேவை என்றார். அதற்கு பாஜக நியமன உறுப்பினர் ராம லிங்கம் இவ்விவகாரத்தை சபையில் எழுப்புவது தேவையற்றது என்றார். உடனே எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எங்களின் அடிப்படை உரிமையில் நீங்கள் எப்படி தலையிட முடியும்?
எங்கள் கொள்கையை நாங்கள் பேசுகிறோம் என்றார். இந்த மோதல் நடைபெறும்போது முதல்வ ரங்க சாமி பேரவையில் இல்லை . அதே போல் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் இப்பிரச்சி னையை பற்றி பேசவில்லை. தொடர்ந்து திமுக உறுப்பினர் நாஜிம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய போது முதல்அமைச்சர் ரங்கசாமி தன் இருக்கைக்கு வந்தார். நாஜிம் பேசி முடித்த பின் எதிர்க்கட்சித்தலைவர் சிவா எழுந்து, ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். இதற்கு அமைச்சர் சாய்சரவணன், பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால் மீண்டும் திமுக, பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா, வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய் யுங்கள், அதில் உள்ள பாதகத்தை சொல்கிறோம். இதற்கு முதல்அமைச் சர் பதில் தர வேண்டும் என்றார். ஆனால் முதல்அமைச்சர் அமைதி யாக இருந்தார். இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதுதான் இதற்கு அர்த்தம் என்று கூறி பேரவையி லிருந்து திமுக காங்கிரஸ் உறுப்பி னர்கள் 11 பேரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.