districts

கொலை வழக்கில்  4 பேருக்கு ஆயுள் தண்டனை

சிதம்பரம், ஏப்.21- சிதம்பரம் அருகே  வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை தொடர்பாக அடித்துக் கொல்லப்பட்டார்.இவ்வழக்கு தொடர்பாக சோழத்தரம்  காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.  சிதம்பரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் தொடர்புடைய பாலமுருக னின் அண்ணி சாந்தி, அவரது உறவினர்கள் சாமிதுரை, ராமலிங்கம், வேலுமணி ஆகிய 4 பேருக்கும்  சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல்  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.