districts

img

அறிவியல் போட்டிக்கு 12 மாணவர்கள் தேர்வு

திருவள்ளூர், பிப்.2- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திரு வள்ளூர் மாவட்டம்  சார்பாக அண்மை யில் குழந்தைகள் அறிவியல் மாநாடு சோழ வரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. மாநாட்டின் கருப்பொருளாக “நீடித்த நிலைத்த பாதுகாப்பு நீர் மேலாண்மை” என்ற தலைப்பில்மொத்தம் 112 ஆய்வு கட்டுரைகளில் 12 மண்டல அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.  இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நீர் பாதுகாப்பு மேலாண்மை குறித்து மாணவர்கள் ஆர்வத்தோடு பல மாதிரிகளை செய்து பங்கேற்றனர். சென்னை வெள்ளத்திலிருந்து மக்களை பாது காக்கும் வழிமுறைகள் குறித்தும் உள்ளூர் அளவிலான ஏரி,  குளங்களை பாது காப்பது குறித்தும் பெரும்பாலான ஆய்வு கள் அமைந்திருந்தது. மாநாட்டில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் குமார்  தலைமை தாங்கி நடத்தினார். மாவட்டச் செயலாளர். ஜெயநாராயணன்  நிகழ்வை ஒருங்கி ணைத்தார். சோழவரம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலாவதி,  ட்ரீம்ஸ் கிட்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் நந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். பொன்னேரி எல்என்ஜி அரசு கல்லூரி பேராசிரியர்கள் தேவசங்கர், ராஜகுரு உள்ளிட்டவர்கள் மற்றும் சவிதா பொறியியல் கல்லூரி பேரா சிரியர்கள் இணைந்து மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்வில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் அனுரத்னா, மாநில செயற்குழு உறுப்பி னர் மோசஸ் பிரபு,  மாவட்ட துணை செயலாளர் சண்முகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் அனிதா, சௌமியா, நிர்மலா, தேன்மொழி கீர்த்தனா, செல்வ லக்ஷ்மி  ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதிவாணன் நன்றி கூறினார்.