புதுச்சேரி, மார்ச் 30- சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பாஜக மற்றும் என். ஆர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்வ தற்காக பிரதமர் மோடி இரண்டா வது முறையாக புதுச்சேரிக்கு செவ் வாய்க்கிழமை வருகை தந்தார். பிரதமர் மோடி வருகையை யொட்டி உச்சபட்ச பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டது. லாஸ் பேட்டை விமான தளத்திலிருந்து கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி மைதானம் வரை 3 அடுக்கு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. பிரதமர் மோடி வரு கையை ஒட்டி புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரியின் கிழக்கு கடற்கரை சாலை, கருவடிக்குப் பம் சாலை மகாத்மா காந்தி சாலை ஆகிய முக்கிய சாலை களில் காலையிலிருந்தே காவல் துறையினரால் கட்டாயத்தின் பேரில் கடைகள் அடைக்கப் பட்டது. இந்த கெடுபிடிகளால் ஆட்டோ, டெம்போ, லோடு கேரியர் வாகன ஓட்டிகள் கடுமையான சிர மத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு காலையி லிருந்தே காவல்துறையினரின் கெடுபிடிகளும், கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரிக்கு பல்வேறு இன்னல்களை மத்திய பாஜக அரசு கொடுத்ததை புதுச் சேரி மக்களை நினைவு கூற வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.