districts

img

குடியிருப்புகளுக்குள் புகுந்த கடல் நீர்: சந்திரபாடி மீனவ மக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை, டிச.9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியி ருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடி யில் 2500-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படும் போதும், கடல் சீற்றமாக காணப்படும் காலங்களிலும் கடல்  நீர் உட்புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்வது தொடர்கதையாக உள்ளது. தற்போது, மாண்டஸ் புயல் காரண மாக வியாழன் இரவு முதல் கடல் சீற்றம் அதிக மாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பிய தால், அதிகளவு கடல்நீர் கிராமத்திற்குள் புகுந் துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடல் சீற்றம் முற்றிலும் குறைந்தால் மட்டுமே கடல் நீர் உட்புகாது. ஒவ்வொரு ஆண்டும் இப்படி  கடல்நீர் உட்புகுவதால் மிகவும் பாதிக்கப்படு வதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறு கின்றனர்.  மேலும் சுமார் 4 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளதால், கடல் சீற்றத் தின்போது தங்கள் பகுதியில் கடல் நீர் உட்புகு கிறது. எனவே சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைத்து தர  வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை  விடுத்து வருகிறோம். தமிழக அரசு உடனடி யாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். முகத்துவா ரத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவுப் பொருட்கள் வழங்கல்
கடல் நீர் உட்புகுந்ததால், பாதிக்கப்பட்ட பகுதிகளை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட  கவுன்சிலர் அப்துல் மாலிக், துணை பெருந் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு 900-க்கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர்.