செங்கல்பட்டு,ஆக.20- வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வா யன்று (ஆக.20) சட்டமன்ற முற்றுகை போராட்டம் ஏஐசிசிடியு மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரணியப்பன் வீட்டுக்கு சென்று அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கைது செய்து, கிளாம்பாக்கம் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து உயிரியல் பூங்கா இயக்குநருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை யில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சொ.இரணியப்பன், சங்கத்தின் தலைவர் ெஜயசீலன், சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் குறித்து இயக்குநர் பரிந்துரை செய்து அவர் இருக்கும் காலத்தில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வதாக பூங்கா நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.அதன் அடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, சிபிஐ மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஏஐடியுசி நிர்வாகி தேவராஜ், பாட்டாளி வர்க்க சமரன் அணி நிர்வாகி கார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.